search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு"

    தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் அதே அளவிலான சம்பள உயர்வை கோவில் அர்ச்சகர்களுக்கும் வழங்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. #ChandrashekarRao

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது.

    முதல்-மந்திரி சந்திர சேகரராவ் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து கோவில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்து இருக்கிறார்.

    அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் அதே அளவிலான சம்பள உயர்வை கோவில் அர்ச்சகர்களுக்கும் வழங்க முடிவு செய்து இருக்கிறார். இது வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

    மேலும் கோவில் அர்ச்சகர்களின் ஓய்வு பெறும் வயது 58-காக தற்போது உள்ளது. இதை 65 வயதாக உயர்த்தி ஆணை பிறப்பித்து இருக்கிறார்.

    இதே போல் மசூதியில் உள்ள இமாம்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 9 ஆயிரம் பேர் வரை பயன் அடைவார்கள் என தெரிகிறது. இதற்கு முன்பு இமாம்களுக்கு ரூ.1,500 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    ×